எல்லையில் துப்பாக்கி சண்டை: பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் அதிரடி

எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எல்லையில் துப்பாக்கி சண்டை: பாகிஸ்தான் படையினர் 2 பேர் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் அதிரடி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறிய தாக்குதலை தொடுத்தனர். பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவும் வகையில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.

அதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிசண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com