

ஸ்ரீநகர்,
ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான 4 பேர் கொண்ட கும்பலின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்த போது, பயங்கரவாதிகள் என தெரிய வந்தது. இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கிசூடு நடந்தது.
அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அதனை வெற்றிகரமாக முறியடித்த இந்திய பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் 2 பேரை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மற்ற 2 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அப்பகுதியில் தேடுதல் மற்றும் தீவிர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.