மணிப்பூரில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மணிப்பூரில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்
Published on

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் காங்கோக்பி மாவட்டத்தில் உள்ளது கெய்தல்மன்பி போலீஸ்நிலையம். இதன் எல்லைக்கு உட்பட்ட லங்கோங்ஜங் மலைத்தொடரில் போலீசார்-பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

7.62 ஸ்னைபர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் 9 எம்.எம். துப்பாக்கிகள்-5, எஸ்.பி.பி.எல். துப்பாக்கிகள்-2, கையெறி குண்டுகள்-2, ஏராளமான வெடிபொருட்கள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com