குரு நானக் ஜெயந்தி: போராட்ட களத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குரு நானக் ஜெயந்தியையொட்டி அமைதியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
குரு நானக் ஜெயந்தி: போராட்ட களத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், உணவு பொருட்களை உடன் எடுத்து சென்று, அவர்களே சமைத்து உண்டு, இரவில் கடும் குளிரில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி வடக்கு பகுதிக்கான போலீஸ் இணை ஆணையாளர் சுரேந்திரா கூறும்பொழுது, அவர்கள் அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் உள்ளனர். விவசாயிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டும். அதற்காக போதிய படைகளை குவித்து உள்ளோம் என கூறினார்.

இந்த நிலையில் சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர். இதேபோன்று திக்ரி எல்லை பகுதியில் இருந்த விவசாயிகள் தரையில் அமர்ந்தபடி, இறை நூல்களை படித்தும், பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com