எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்றதால் 15-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை


எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்றதால் 15-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை
x

கோப்புப்படம் 

12-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குருகிராம்,

அரியானா மாநிலம் குருகிராம் நகருக்கு அருகே டாடா பிரிமந்தி சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஒரு சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டான். 17 வயதான அவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் மாணவன் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

தான் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் இருந்த அவர், தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். உடனடியாக குடியிருப்புவாசிகள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்த மாணவனின் பெயர் சவுர்யா சாண்டில்யா என்று தெரியவந்தது.

1 More update

Next Story