கவுகாத்தி-பெங்களூரு விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது; பயணிகள் நலம்

கவுகாத்தி நகரில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென கொல்கத்தா நகருக்கு திருப்பி விடப்பட்டது.
கவுகாத்தி-பெங்களூரு விமானம் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது; பயணிகள் நலம்
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ 6இ-291 என்ற விமானம் ஒன்று பெங்களூரு நகருக்கு புறப்பட்டது. விமானிக்கு முன்னெச்சரிக்கை தகவல் ஒன்று கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த விமானம் கொல்கத்தா நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமான இயக்க நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, கொல்கத்தா நகரில் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியது.

அதன்பின் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றனர். இதனை கவுகாத்தி விமான நிலையம் வெளியிட்டு உள்ள ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

அந்த விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. அது முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமே தவிர, அவசரகால தரையிறக்கம் அல்ல என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com