குவாலியர்; கொடூர ஆயுதங்களுடன் சாலையின் நடுவே மோதி கொண்ட மாணவர்கள்

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் கொடூர ஆயுதங்களுடன் சாலையின் நடுவே மாணவர்கள் குழுக்களாக பிரிந்து மோதி கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
குவாலியர்; கொடூர ஆயுதங்களுடன் சாலையின் நடுவே மோதி கொண்ட மாணவர்கள்
Published on

குவாலியர்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் தான்சேன் நகர் பகுதியில் சாலையின் நடுவில் திடீரென மாணவர்கள் சிலர் குழுக்களாக பிரிந்து, கொடூர ஆயுதங்களால் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

அவர்கள் கைகளில் பெல்ட், கத்தி, வாள் ஆகியவற்றை வைத்திருந்தனர். இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. சம்பவம் நடந்தபோது, அந்த வழியே சென்றவர்கள் மிரண்டு போய் கூச்சல் போட்டதுடன், அவர்களை தடுக்கவும் முயன்று உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளனர். எனினும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து குவாலியர் நகர போலீசார் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com