பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பரபரப்பு பேட்டி

பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கூறினார்.
பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமாக இருந்ததை நினைத்து வேதனை அடைகிறேன்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. பரபரப்பு பேட்டி
Published on

மைசூரு:

மைசூருவில் பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இரட்ட என்ஜின் அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு நல்லது என நினைத்து நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தேன். இதன் மூலம் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. ஆனால் பா.ஜனதா அரசு ஊழல் அரசாக இருந்துள்ளது. இப்படியொரு அரசு அமைய நான் காரணமாக இருந்ததை நினைத்து நான் வேதனை அடைகிறேன். நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறன். பாவ சுமையை குறைக்க தினமும் தவம் செய்கிறேன். நான் பா.ஜனதாவை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர் கிடையாது. நான் சாகித்ய கோட்டாவில் மேல்-சபை உறுப்பினராக இருக்கிறேன். எனவே நான் வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குகிறேன்.

இவ்வாறு அவர்கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com