எச்1-பி விசா கட்டண உயர்வு; மத்திய அரசு சொல்வது என்ன?

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
எச்1-பி விசா கட்டண உயர்வு; மத்திய அரசு சொல்வது என்ன?
Published on

புதுடெல்லி,

இந்திய தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெறும் எச்1-பி விசாவுக்கான கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இது இந்தியாவில் அரசு மற்றும் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், எச்1-பி விசா கட்டண உயர்வு இந்திய குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார். மேலும், இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகள் தகுந்த முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என மத்திய அரசு நம்புவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com