ஹத்ராஸ் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை விவகாரத்தில் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
ஹத்ராஸ் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் கடந்த செப்டம்பர் 14ந்தேதி 19 வயது தலித் இளம்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29ந்தேதி உயிரிழந்து விட்டார். இதன்பின்னர் அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டு விட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து இந்த வழக்கானது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் நடந்த ஹத்ராஸ் நகரின் வயல்வெளி பகுதிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்றனர். உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதன்பின் இளம்பெண்ணின் சகோதரரும் சம்பவ பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனிடையே, இளம்பெண்ணின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ஆனால் சிகிச்சை பெற அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து இருக்கிறார். அதனால் ஹத்ராஸ் நகர மருத்துவ குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் தாயார் பரிசோதனைக்காக தனது குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com