தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்


தாய்லாந்து-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை தகர்ப்புக்கு இந்தியா கண்டனம்
x

எல்லை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் கம்போடியா பகுதியில் இருந்த 29 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் இடித்து அகற்றியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு இந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள இந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது.

பிரதேச உரிமைக் கோரிக்கைகள் இருந்த போதிலும், இது போன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன.மேலும் இவை நடக்கக்கூடாது. திரும்பி அமைதியை மீட்டெடுக்கவும், மேலும் உயிர் இழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரம்பரியச் சின்னங்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.

1 More update

Next Story