இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

இந்தியா-இலங்கை இடையேயான முன்னேற்றம் தொடர்பாக பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையேயான முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் நடந்த சந்திப்பில் இந்தியா-இலங்கை இடையேயான முன்னேற்றம் தொடர்பாக பேசினோம். சுகாதாரம், எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் உரையாடினோம்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com