பெண் கைதிகள் தொல்லை... சிறையில் தனி அறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்


பெண் கைதிகள் தொல்லை... சிறையில் தனி அறை கேட்கும் நடிகை ரன்யா ராவ்
x
தினத்தந்தி 30 Jun 2025 12:29 AM IST (Updated: 5 July 2025 2:41 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் சிறையில் உள்ள கைதிகள் அவருக்கு தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். அதாவது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரன்யா ராவுடன் மேலும் சில பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ரன்யா ராவ் எதுவும் பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரன்யா ராவை, அந்த கைதிகள் கேலி, கிண்டல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ரன்யா ராவை தங்கம் கடத்தல் ராணி எப்படி இருக்கிறாய்? சிறைச்சாலை எப்படி இருக்கிறது? என்று பல்வேறு வார்த்தைகளை கூறி கேலி, கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் நொந்துள்ள ரன்யா ராவ் தனது வக்கீல் மூலம் சிறை அதிகாரிகளிடம் வேறு அறை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். தனி அறை ஒதுக்க வேண்டும் என்று முறையிட்டு வருகிறார். ஆனால் அவரது கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரன்யா ராவ் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.

1 More update

Next Story