

சண்டிகார்,
அரியானாவில் 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 8 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்கள் கிடைக்கவில்லை.