யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரணை

சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றது.
யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரணை
Published on

நாட்டில் ஏராளமான சட்ட விரேத சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.கோடிக்கணக்கான நாட்டு மக்களை காப்பாற்ற வும், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவும் இது போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக் கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.சட்ட விரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்து பிரபலப் படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தெலுங்கானா போலீசார் ஏற்கனவே நடிகர் ராணா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தி ருந்தது.

இந்த நிலையில் சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி யது. இதேபோல நடிகர் சோனு சூட், நடிகை ஊர்வசி ரவுதேலா ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டனர்.விளம்பர பிரசாரத்துக் காக இந்த சூதாட்ட செயலிகள் பல்வேறு நிறுவனங் களுக்கு ரூ.50 கோடிக்கு மேல் பணம் செலுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com