நான் ராபர்ட் வதேராவை சந்திக்கவில்லை: ஹர்திக் படேல் விளக்கம்

நான் ராபர்ட் வதேராவை ரகசியமாக சந்திக்கவில்லை என்று படேல் இன தலைவர் ஹர்திக் படேல் விளக்கம் அளித்துள்ளார்.
நான் ராபர்ட் வதேராவை சந்திக்கவில்லை: ஹர்திக் படேல் விளக்கம்
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனவர் பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஹர்திக் பட்டேல். குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஹர்திக் படேல், ராகுல் காந்தி அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோரை ரகசியமாக சந்தித்ததாக தனது சமூக தலைவர்களிடம் கூறியதாக ஹர்திக் படேலின் முன்னாள் உதவியாளர் தினேஷ் பம்பானி குற்றம் சாட்டி இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹர்திக் படேல் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இது குறித்து ஹர்திக் படேல் கூறுகையில், நான் தற்போது ராபர்ட் வதேராவை சந்தித்ததாக குறை கூறுகின்றனர். அனைத்தும் முற்றிலும் தவறானது. நாளை, நான் நவாஸ் ஷெரீப்பை சந்தித்ததாக கூட கூறலாம். பிறகு தாவூத் இப்ராகீமை சந்தி த்ததாக கூட என் மீது குற்றச்சாட்டு வைப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com