

மும்பை,
குஜராத் மாநிலத்தில் பதிதார் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் பதிதார் அனன்மத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல். 25 வயதான ஹர்திக் படேல் தனது பால்ய கால தோழியான கிஞ்சல் பரிக்கை மணக்க உள்ளார். இவர்களது திருமணம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சண்டனகரி என்ற கிராமத்தில் ஹர்திக் படேலும், கிஞ்சலும் பக்கத்து பக்கத்து வீடுகளில் ஒன்றாக வளர்ந்தனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது பூர்வீகமான விராம்காமுக்கு குடிபெயர உள்ளனர்.
ஹர்திக் குடும்பத்தினரின் குலதெய்வக் கோவிலான பஹுசர் மற்றும் மெல்டி மெஹதா கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக ஹர்தீக்கின் தந்தை பாரத் படேல் தெரிவித்துள்ளார்.