காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜகவில் இணைகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் வரும் ஜூன் 2 ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜகவில் இணைகிறார்
Published on

அகமதாபாத்,

காங்கிரஸில் இருந்து விலகியுள்ள ஹார்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை ஹார்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19ஆம் தேதி தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன் என்று குறிப்பிட்டு இருந்த ஹர்திக் படேல், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால், அவர் பாஜகவில் இணையலாம் என்று பரவலாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது ஹர்திக் படேலே இதை உறுதி செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com