ஹர்கர் திரங்கா பிரசாரம்; வீட்டில் மூவர்ண கொடியை ஏற்றிய மத்திய மந்திரி அமித்ஷா

கோடிக்கணக்கான நாட்டு மக்கள் இன்று மூவர்ணத்துடன் தங்களை இணைத்து, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மனவலிமையை அதிகரிக்க செய்துள்ளனர் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஹர்கர் திரங்கா பிரசாரம்; வீட்டில் மூவர்ண கொடியை ஏற்றிய மத்திய மந்திரி அமித்ஷா
Published on

புதுடெல்லி

ஹர்கர் திரங்கா பிரசாரத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய வீட்டில் மத்திய மந்திரி அமித்ஷா மூவர்ண கொடியை ஏற்றினார்.

இந்திய நாடு, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது. அந்த நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 80-வது சுதந்திர தினம் என்ற மைல்கல்லை அடைவதற்காக இந்தியா தயாராகி வருகிறது.

வீட்டில் மூவர்ண கொடி

இதில், வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டை நினைவுகூர்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டில் மூவர்ண கொடியை இன்று ஏற்றினார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வோர் இந்தியரின் மனதிலும் நாட்டுப்பற்றுக்கான மனஉறுதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை ஹர்கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி) பிரசாரம் இன்னும் வலுவாக மாற்றியுள்ளது என பதிவிட்டு உள்ளார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம்

கோடிக்கணக்கான நாட்டு மக்கள் இன்று மூவர்ணத்துடன் தங்களை இணைத்து, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மனவலிமையை அதிகரிக்க செய்துள்ளனர் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த தருணத்தில் மத்திய மந்திரிகள் பலர் இந்த பிரசாரத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு, மூவர்ண கொடி பேரணி ஒன்றை துவக்கி வைத்திருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com