அரியானா: லாரியின் பிரேக் பிடிக்காமல் விபத்து; அடுத்தடுத்து 3 பேர் பலி, 4 பேர் காயம்

அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
அரியானா:  லாரியின் பிரேக் பிடிக்காமல் விபத்து; அடுத்தடுத்து 3 பேர் பலி, 4 பேர் காயம்
Published on

சண்டிகார்

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும் அந்த லாரி நிற்காமல் செக்டார் 9-ல் பைபாஸ் சாலையில் சென்றது.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் பலியாகி உள்ளார். இதுபற்றி பகதூர்கார் நகருக்கான காவல் அதிகாரி ஜமீல் அகமது இன்று கூறும்போது, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.

Also Read
பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமுமே ஈரான் போருக்கான முடிவாக இருக்கும் - பிரதமர் மோடி பேச்சு
அரியானா:  லாரியின் பிரேக் பிடிக்காமல் விபத்து; அடுத்தடுத்து 3 பேர் பலி, 4 பேர் காயம்

அந்த லாரி ஓட்டுநர் டெல்லியின் கீர்த்தி நகரை சேர்ந்தவர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், லாரியின் பிரேக் பிடிக்கவில்லை. அதனாலேயே அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது என ஓட்டுநர் கூறினார். இதுதொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com