

அரியானாவின் ரேவாரி நகரில் கார் ஒன்று சாலையில் தவறான வழியில் சென்றுள்ளது. இதனால் காவலர் ஒருவர் அந்த காரை தடுத்து நிறுத்தி உள்ளார். ஆனால் அந்த கார் ஓட்டுனர் காவலரை காரின் முன்பக்கத்தில் வைத்தபடி, சாலையில் இழுத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி காவலர் கூறும்பொழுது, தவறான வழியில் சாலையில் சென்ற காரை நான் தடுத்து நிறுத்தினேன். ஆனால் கார் ஓட்டுனர், இது பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான சதீஷ் கோடாவின் கார் என கூறினார். நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு கோடா கோபத்தில் எனது கன்னத்தில் அறைந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.