அரியானா: டெம்போ மீது கார் மோதி விபத்து - 17 பேர் படுகாயம்

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியானா: டெம்போ மீது கார் மோதி விபத்து - 17 பேர் படுகாயம்
Published on: 

சண்டிகர்,

அரியானாவில் டெம்போ மீது கார் மோதிய விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சென்டிரல் பார்க் பகுதியில் வேலை செய்வதற்காக டெம்போவில் பெண் தொழிலாளர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் இன்று காலை அழைத்து செல்லப்பட்டனர். அந்த டெம்போ சொஹ்னா - குருகிராம் சாலையில் சென்றுகொண்டிருந்தது.

விபத்து - 17 பேர் படுகாயம்

குருகிராமில் எல்டிகோ சொசைட்டி பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார், டெம்போ மீது மோதியது. இதில் டெம்போ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் டெம்போவில் பயணம் செய்த 15 பெண்கள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com