தாய், சகோதரன் உள்பட 5 பேரை வெட்டிக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் - அதிர்ச்சி சம்பவம்

தப்பியோடிய முன்னாள் ராணுவ வீரரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தாய், சகோதரன் உள்பட 5 பேரை வெட்டிக்கொன்ற முன்னாள் ராணுவ வீரர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

சண்டிகார்,

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள ராட்டூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் பூஷன் குமார். இவர் தனது தாய், சகோதரர், அண்ணி மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். முன்னாள் ராணுவ வீரருக்கும் அவரது சகோதரருக்கும் அடிக்கடி நில பிரச்சினை நடத்து வந்தது.

இதையடுத்து நேற்று இரவு அவர்கள் இருவருக்கும் மீண்டும் நிலம் தொடர்பான பிரச்சினை பயங்கரமாக வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் வீரர் கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் 5 பேரையும் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் அவர்களை தகனம் செய்யவும் அவர் முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பாலா போலீசார் தகவல் கிடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதி எரிந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த பூஷன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அம்பாலா எஸ்பி சுரேந்திர சிங் கூறுகையில், " 2 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில் நாராயண்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஷன் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com