அரியானா: விபத்தில் சிக்கிய போர் விமானம் - உயிர்தப்பிய விமானி


அரியானா: விபத்தில் சிக்கிய போர் விமானம் - உயிர்தப்பிய விமானி
x

விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்து விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக ஜாகுவார் போர் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் மோர்னி மலைப்பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பால்ட்வாலா கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன்னதாக விமானத்தில் இருந்து சரியான நேரத்தில் வெளியேறிய விமானி, பாராசூட்டை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, விமானி அந்த விமானத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று, பின்னர் விமானத்தில் இருந்து வெளியேறினார் என்றும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story