அரியானா: பெயிண்ட் ஆலையில் தீ விபத்து; 4 பெண்கள் பலியான சோகம்

தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அரியானா:  பெயிண்ட் ஆலையில் தீ விபத்து; 4 பெண்கள் பலியான சோகம்
Published on

ஜிந்த்

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் சபிடான் நகரில் பாத் காலனி பகுதியில் பெயிண்ட் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆலையின் நுழைவு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் உள்ளே சிக்கி கொண்டனர். தீ மளமளவென பரவியது. இதனால், அவர்களால் உடனே வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 4 பெண்கள் பலியானார்கள். அவர்களுடன் வேறு 11 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read
உத்தராகண்ட் கவர்னரின் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கம்

அரியானா:  பெயிண்ட் ஆலையில் தீ விபத்து; 4 பெண்கள் பலியான சோகம்

ஆலையின் நுழைவு வாசலுக்கான கதவு மூடப்பட்டு இருந்துள்ளது. இதனால், அவர்களால் எளிதில் தப்ப முடியவில்லை. வெளியே இருந்தும் உள்ளே சென்று காப்பாற்றும் முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை என அதுபற்றி உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஹோலி கொண்டாட்டத்திற்கான வண்ணங்களை அவர்கள் தயாரித்து கொண்டிருந்தனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி ஜிந்த் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் குல்தீப் சிங் இன்று கூறும்போது, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது. தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாவ்டி கேட் பகுதியில் பழைய பொருட்களை வைத்திருக்கும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 10 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து சம்பவம் பற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர் சஞ்சய் சர்மா தலைமையிலான குழுவினர் உடனை சென்று போராடி தீயை அணைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com