

புதுடெல்லி,
அரியானாவின் சோனிபட்டில் ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு தொடர்பான 19 இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை பணியில் இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றில், ஜே.இ.இ. பிரதான தேர்வுக்கு பதிவுசெய்யப்பட்ட 22 லட்சம் மாணவர்களில் ஒவ்வொரு மாணவரும் நியாயமான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு இல்லையா? ஆனால் கடைசியில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கூறப்பட்டு உள்ளது.