இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபர் கைது..!

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபர் கைது..!
Published on

ஃபரிதாபாத்,

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சஜித் என்ற நபர் அரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள என்ஐடி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சலூன் வைத்துள்ளார். இந்த நிலையில் பேஸ்புக்கில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து சஜித் மீது மத உணர்வுகளைத் தூண்டுதல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த ஃபரிதாபாத் போலீசார் உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னூரில் இருந்த சஜித்தை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் போலீஸ் காவலில் வைக்கப்படுவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com