ராம்ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை கைது செய்ய அரியானா போலீஸ் தீவிரம்

தலைமறைவாகியுள்ள ராம்ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை கைது செய்ய அரியானா போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
ராம்ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தை கைது செய்ய அரியானா போலீஸ் தீவிரம்
Published on

சண்டிகார்,

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் இன்சான் என்பவர்தான், இந்த வன்முறைகளுக்கு தூண்டுதலாக இருந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஹனிபிரீத் இன்சானை கைது செய்து விசாரிக்க அரியனா போலீஸ் முடிவு செய்தது. ஹனிபிரீத் இன்சானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், கைதில் இருந்து தப்பிப்பதற்காக ஹனிபிரீத் சிங் தலைமைறைவானார். இதனால், ஹனிபிரீத் சிங்கை கைது செய்யும் நோக்கில் அரியானா போலீஸ் அவரை வலை வீசி தேடி வருகிறது. டெல்லியில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான இல்லங்களில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஹனிபிரீத்சிங் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தால், தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், ஹனிபிரீத்சிங்கிற்கு ஜாமீன் வழங்க கோரி, அவரது வழக்கறிஞர் சிங்டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com