அரியானா சட்டசபை தேர்தல்: ‘டிக்டாக்’ பிரபலத்துக்கு பா.ஜனதாவில் ‘சீட்’

அரியானா சட்டசபை தேர்தலில், டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பா.ஜனதாவில் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
அரியானா சட்டசபை தேர்தல்: ‘டிக்டாக்’ பிரபலத்துக்கு பா.ஜனதாவில் ‘சீட்’
Published on

சண்டிகர்,

அரியானா மாநில சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் 75-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பா.ஜனதா தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. இதற்காக பிரபலமான வேட்பாளர்களை கட்சித்தலைமை தேர்வு செய்து வருகிறது.

அந்தவகையில் பிரபல மல்யுத்த விளையாட்டு வீரர் யோகேஸ்வர் தத், வீராங்கனை பபிதா போபத், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதைப்போல டிக்டாக் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக விளங்கி வரும் சோனாலி போகத்துக்கும் ஆடம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கியிருக்கும் சோனாலி, தனது பெயரை அறிவித்த பா.ஜனதா தலைமைக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

இவர்கள் அனைவரும் சமீபத்தில்தான் பா.ஜனதாவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com