அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; அரியானா அரசு நடவடிக்கை

அரியானாவில் 14 மாவட்டங்களில் அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது.
அனைத்து வகை பட்டாசுகளை விற்க, வெடிக்க தடை; அரியானா அரசு நடவடிக்கை
Published on

சண்டிகர்,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். எனினும், பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அரியானாவில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகை பட்டாசுகளை விற்க மற்றும் வெடிக்க அரசு தடை விதித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், கடந்த ஆண்டு நவம்பரில் காற்றின் தரம் மிக குறைந்த நகரங்களிலும் இந்த தடை விதிக்கப்படுகிறது. மூத்தோர், குழந்தைகள், இணை நோய்கள் கொண்டவர்கள் மற்றும் சுவாச கோளாறு பாதிப்புளை கொண்டவர்கள் மற்றும் குளிர்கால நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com