

சண்டிகர்,
அரியானாவில் பள்ளி சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பயிற்சி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் பள்ளி வகுப்பறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுவனின் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவனிடம் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் சிம்ரன்ஜித் கவுர் மற்றும் பூஜா ராணி ஆகிய 2 பயிற்சி ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.