

சண்டிகர்,
அரியானாவில் பள்ளி வகுப்பறையில் 6 வயது மாணவியை 8 வயது சிறுவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 6 வயதான மாணவியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவியை அந்த சிறுவன் கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் தாக்குதலில் சிறுமி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, படுகாயமடைந்த சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கொடூரமாக தாக்கிய சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை வகுப்பறையில் சிறுவன் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.