வன்முறை, வெறுப்புணர்வு தேசத்தை பலவீனமாக்குகிறது: ராகுல் காந்தி

ராமநவமி ஊர்வலத்தின் போது சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், ராகுல் காந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வன்முறை, வெறுப்புணர்வு தேசத்தை பலவீனமாக்குகிறது: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

வன்முறை மற்றும் வெறுப்புணர்வு தேசத்தை பலவீனம் ஆக்குவதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒருங்கிணைந்த இந்தியாவை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராமநவமி ஊர்வலத்தின் போது சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், ராகுல் காந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெறுப்பு, வன்முறை ஆகியவை நமது தேசத்தை பலவீனம் ஆக்குகிறது. சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதற்கு ஒன்றுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com