ரூ.3,300 கோடிக்கு ஹவாலா பரிமாற்றம் கண்டுபிடிப்பு: ஈரோடு உள்பட 42 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

ஈரோடு உள்பட 42 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.3,300 கோடிக்கு ஹவாலா பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.3,300 கோடிக்கு ஹவாலா பரிமாற்றம் கண்டுபிடிப்பு: ஈரோடு உள்பட 42 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
Published on

புதுடெல்லி,

வருமான வரித்துறையினர் இந்த மாதம் முதல் வாரத்தில் டெல்லி, மும்பை, ஐதராபாத், ஈரோடு, புனே, ஆக்ரா, கோவா ஆகிய இடங்களில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பெரிய நிறுவனங்களுக்கும், ஹவாலா ஏஜெண்டுகளுக்கும் இடையிலான தொடர்பு இருப்பதும், பெரிய அளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு போலி ஒப்பந்தம், போலி பில்கள் ஆகியவை மூலம் ரூ.3,300 கோடி ஹவாலா பணபரிவர்த்தனை நடந்துள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ஆந்திராவில் உள்ள முக்கிய பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் கொடுத்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.4.19 கோடி, ரூ.3.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com