பிரதமர் மோடியுடன் இணக்கமான உறவு உள்ளது: பாஜகவை எதிர்க்கட்சியாகவே பார்க்கிறோம் - ஒடிசா முதல் மந்திரி

பாஜக தங்களுக்கு எதிர்க்கட்சிதான் என பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும், பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

பாஜகவுடனான இந்த நெருக்கத்தை காங்கிரஸ் குறைகூறி வருகிறது. குறிப்பாக, பா.ஜனதாவும், பிஜூ ஜனதாதளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என கூறிவருகிறது. ஆனால் பாஜக தங்களுக்கு எதிர்க்கட்சிதான் என பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

புவனேஸ்வரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மேலும் அவர் கூறுகையில், 'எனினும் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களில் மத்திய அரசிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கிறது. அத்துடன் பிரதமர் மோடியுடன் இணக்கமான உறவு உள்ளது' என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com