வாக்குச்சீட்டு முறை நிச்சயம் தேவையில்லை; மின்னணு வாக்கு எந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது; மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார்
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார்
Published on

முழு நம்பிக்கை உள்ளது

மராட்டிய சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்துவது குறித்து மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என முன்னாள் சபாநாயகர் நானா படோலே கூறியிருந்தார்.

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தி பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று சில மந்திரிகள் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து மந்திரி சபை முடிவு செய்யும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று அவர் வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

நன்றாக வேலை செய்கிறது

இதுகுறித்து அஜித்பவார் கூறியதாவது:-

ஒவ்வொரு தனிநபருக்கு வெவ்வேறு பார்வை இருக்கும். அவர்கள் அதற்கு ஏற்றா போல கூறுகிறார்கள். நான் எனக்கு தோன்றுவதை கூறுகிறேன். வாக்குச்சீட்டு முறை நிச்சயமாக தேவையில்லை. தேர்தலில் வெற்றி பெறும்போது யாருக்கும் எந்த பிரச்சினையும் வருவதில்லை. தோல்வியை சந்திக்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தை குறை கூறுகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் நன்றாக வேலை செய்கின்றன. காகிதம் இல்லாமல் வேலை நடக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால், எனக்கு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com