

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர்.
கைதான திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் பாலச்சந்திர குமார் அளித்த தகவலின் படி, நடிகர் தீலிப்பிற்கு எதிராக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனக்கு எதிரான வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில், தீலிப் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட், திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.