

ஐதராபாத்,
நாட்டின் கொரோனா 2வது அலையின் தீவிரம் பல பகுதிகளில் குறைந்து வரும் சூழலில் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளன. இதன்படி, தெலுங்கானாவில் வருகிற செப்டம்பர் 1ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது.
பள்ளி, கல்லூரி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.