இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம் அந்தந்த நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவிலும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு சோதனை செய்ததில் சிலருக்கு உருமாறிய புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை 38- பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலும் 20 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com