தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்

நடைமேடையை கடக்க முயன்றபோது சரக்கு ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து தலைமை ஆசிரியர் உயிர் தப்பினார்.
தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்
Published on

தாவணகெரே:

நடைமேடையை கடக்க முயன்றபோது சரக்கு ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து தலைமை ஆசிரியர் உயிர் தப்பினார்.

தலைமை ஆசிரியர்

சித்ரதுர்கா மாவட்டம் பி.துர்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் சிவக்குமார். இவர் சொந்த வேலை காரணமாக பெங்களூருவுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் பெங்களூரு இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு தாவணகெரே ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் சிவக்குமார் ரெயிலுக்காக காத்திருந்தார். ஆனால் ரெயில் 2-வது நடைமேடைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சிவக்குமார், அவசரமாக முதலாவது நடைமேடையில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்து 2-வது நடைமேடைக்கு செல்ல முயன்றார்.

தண்டவாளத்தில் படுத்து...

அப்போது தண்டவாளத்தில் அவரது செருப்பு சிக்கிக் கொண்டது. அவர் செருப்பை எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உயிரை காப்பாற்றி கொள்ள தண்டவாளத்தின் நடுவே படுத்து கொண்டார். இதனை பார்த்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார்.

இதில், லேசான காயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆசிரியர் சிவக்குமார் தண்டவாளத்துக்கு நடுவே படுத்து உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com