

புதுடெல்லி,
அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், நேற்று அவர் பணிக்கு வரவில்லை.
எனவே, அயோத்தி வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று விசாரணை நடைபெறும் என்று பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.