

புதுடெல்லி,
மத்திய மந்திரி சபை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் மற்றும் மாற்றம் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த 2019- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. 43- பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த, நிலையில் மத்திய மந்திரிகள் சிலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்துள்ளார்.