

புதுடெல்லி,
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளாவே உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேல் தொற்று பாதிப்பு பதிவாகி அதிரவைக்கிறது.
இந்த நிலையில், கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இரு மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.