

புதுடெல்லி,
தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆணைய மசோதா, ஏற்கனவே நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறி விட்டது.
இந்தநிலையில், இம்மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. துணை மருத்துவ படிப்புகளுக்கு ஒரே சீரான கல்வித்தரத்தை நிர்ணயிக்க இம்மசோதா வகை செய்கிறது.
மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் பதில் அளித்து பேசுகையில், மருத்துவ தொழிலில் துணை மருத்துவ, சுகாதார பணியாளர்களின் பங்கு முக்கியமானது. டாக்டர்களுக்கு இணையானது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இம்மசோதா உதவும். சுகாதாரப் பணியாளர்கள் மசோதா, சுகாதார பணியாளர்களுக்கு கண்ணியத்தை வழங்கும். இந்த மசோதா சுகாதாரப் பணியாளர்கள் துறையை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது என்று அவர் கூறினார்.