

மும்பை,
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகான் பகுதியில் 4 நாட்கள் நடைபெறும் ‘தேசிய ஆரோக்கிய கண்காட்சி 2026’ நிகழ்ச்சியை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“ஆரோக்கியமான குடிமக்கள் நாட்டை ஆரோக்கியமாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். மருத்துவ தாவரங்களை வளர்ப்பது விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மண்ணின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
காடுகள் எரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் சேர்ந்து மருத்துவ தாவரங்களும் அழிக்கப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்ப்பதும், மருத்துவ தாவர விவசாயம் குறித்தும் அரசாங்கம் மட்டுமின்றி, நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.