ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தானே,

கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இருந்தது" என குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு எதிராக பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் குந்தே அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில், "ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை. இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுல் காந்தியின் வக்கீல் நாராயண் அய்யர் வாதிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், ராகுல்காந்தி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்தார். மனுதாரர் ராஜேஷ் குந்தேயின் வக்கீல் பி.பி.ஜெய்வந்த், சில ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் மே 15-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு பாலிவால் ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் மனுதாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com