2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

'2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் மேல்முறையீடு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார்.வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மேல்முறையீடு அனுமதி மனுக்கள் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத் துறை, எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மிகாமல் அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்டோபர் 31-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிட்டார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்ற பணப்பலன் பற்றி வாதங்களாக முன்வைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை 6-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com