வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கை கடந்த 15-ந் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு குறித்த விசாரணைக்காக 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடக்கிறது. தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com