குஜராத்: வெப்பக்காற்றின் அளவு உயருகிறது

குஜராத்தில் வெப்பகாற்றின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்: வெப்பக்காற்றின் அளவு உயருகிறது
Published on

காந்திநகர்,

இந்தியாவின் வானிலை ஆராய்ச்சிமையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குஜராத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப காற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்றும் மழை பொழிவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று வெப்ப காற்றின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பல இடங்களில் 44 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக வெப்பநிலை நிலவுகிறது.

வடமேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையில் காற்று மாறி வீசுவதால், நாளை மற்றும் நாளை மறுநாள் வெப்ப அளவு குறையும் என்றும் எனினும் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மீண்டும் உயர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஹமதாபாத் பகுதிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுரேந்திரா நகரின் வெப்பநிலை நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலையாக 45.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

இடார் மற்றும் கண்ட்லா விமான நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையாக 44 டிகிரி செல்சியஸ் பதிவானதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

குஜராத் தவிர, பஞ்சாப், ஹரியானா, வடக்கு புதுடெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிக வெப்பகாற்றின் அளவு உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடஇந்தியா முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப காற்றின் தாக்கம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com