வாட்டி வதைக்கும் வெயில்; மே.14 முதல் கோடை விடுமுறை அறிவித்தது பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப அலை வீசுகிறது. இதன் காரணமாக, வரும் மே 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Photo Credit:PTI
Photo Credit:PTI
Published on

சண்டிகார்,

கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது

இந்நிலையில் இதுகுறித்து பஞ்சாப் முதல்- மந்திரி பகவந்த் மான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com